புதிதாக 8 மாவட்டங்களா... தமிழக அரசிடம் விரைவில் ஆலோசனை... அமைச்சர் கொடுத்த புது அப்டேட்!

தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை உருவாக்குவது குறித்து அரசிடம் ஆலோசனை.

Update: 2023-04-03 01:15 GMT

தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். ஆரணி மற்றும் கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகமாக மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் அவர்களை மாவட்ட வாரியாக பிரிப்பதன் மூலமாக அனைத்து மக்களுக்கும் அரசின் உதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் கிடைப்பதில் பெருமளவு உதவியாக இருக்கும்.


ஏனெனில் அதிகமாக மக்கள் தொகை இருப்பதன் காரணமாக ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைகள் இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார்கள். இந்த ஒரு கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அமைச்சர் எட்டு மாவட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கைகள் வந்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.  


தொடர்ச்சியாக பல்வேறு உறுப்பினர்கள் இந்த ஒரு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். இது குறித்த முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொழுது கூடிய விரைவில் நிதிநிலைக்கு ஏற்ப புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் புதிய மாவட்டங்களை எதிர்பார்க்கலாம் என்று மக்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News