சென்னையில் தேர்தல் பறக்கும்படை.. மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைப்பு.!

தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Update: 2021-02-28 03:59 GMT

தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் வந்துள்ளது. நடத்தை விதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.


 



இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்கான பறக்கும் படை குழுக்களின் வாகனங்களை கமிஷனர் பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த குழுக்கள் தேர்தலில் பணம் கொடுப்பது மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை அளிக்கும் கட்சிகளை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

இதே போன்று தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News