தமிழ்நாட்டின் பாதுகாப்பு வழித்தடம் ராணுவ துறைக்கு வலு சேர்க்கும் - பிரதமர் மோடி!
தமிழ்நாட்டிலும் உத்தரபிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் ராணுவம் மற்றும் விண்வெளித் துறைக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளது.
உலகின் உற்பத்தி மையமாக உருவாகும் இலக்கை நோக்கி ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை எங்கள் தலைமையிலான அரசு செய்து வருகிறோம். இந்திய போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்கள், மருந்துகள், தடுப்பூசிகள், மின்னணு சாதனங்கள் என்று பல்வேறு துறைகளிலும் எங்கள் தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இன்றைக்கு இந்தியாவின் புதிய மனநிலை புதிய கலாச்சாரத்துடன் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை தனியார் துறை என சம முக்கியத்துவம் அரசு கொடுக்க தொடங்கியுள்ளது. தங்கள் உற்பத்தியுடன் கூடிய ஊக்க தொகையை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 160 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவின் முதலீடு செய்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்க தொழில்களுடன் மட்டுமல்லாது பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறது.
அவை 61 துறைகளில் 31 மாநிலங்களில் பரவி உள்ளனர். விண்வெளியில் மட்டுமல்லாது பில்லியன் அமெரிக்க டாலர்கள் 24,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் விண்வெளித் துறை தற்சார்பு துறையில் முக்கிய துண்களாக இருக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டிற்குள் நமது ராணுவ தளவாட உற்பத்தி இலக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகரிக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நமது பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் விட அதிகமாக இருக்கும். உத்தர பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு வழித்தடங்களை இந்த துறைக்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார.
Input & Image courtesy: Hindu Tamil News