இபதிவு இணையதளம் முடங்கியது.. பொதுமக்கள் அவதி.!
தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுயதொழில் செய்வோர் அதிகளவில் இபதிவு செய்ய முயன்றதால் அந்த இணையதளம் முற்றிலும் முடங்கியது.
தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுயதொழில் செய்வோர் அதிகளவில் இபதிவு செய்ய முயன்றதால் அந்த இணையதளம் முற்றிலும் முடங்கியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு 11 மாவட்டங்களை தவிர்த்து சில தளர்வுகளை அறிவித்தது.
அதன்படி சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பரகள், தச்சர்கள் உள்ளிட்டோர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் வெளி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்வதற்காக, இபதிவு இணையதளத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இன்று காலை முதல் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுவதால், அந்த இணையதளம் முற்றிலும் முடங்கிபோயுள்ளது.
இதனால் வேலைக்கு செல்ல இருந்த பொதுமக்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த இணையதளம் முடங்கி போயுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என அரசுக்கு பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.