மக்களை தூண்டி விட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது - ஆளுநர் ஆர்.என். ரவியின் அடுத்த அடி!

மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு.

Update: 2023-04-07 02:44 GMT

சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'எண்ணித் துணிக' என்று ஒரு தலைப்பில், இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்காக தயாராகி வரும் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். UPSC தீர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பலர் கவர்னரிடம் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு முன்பு தமிழக ஆளுநர் மாணவர்களுடன் உரையாடல் நடத்துகிறார்.


அப்பொழுது மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடிவிட்டார்கள் என்று பரபரப்பு தகவலை அவர் பகிர்ந்து இருக்கிறார். எனவே இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றி அவர் கூறுகையில், நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடம் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.


குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நிதிகள் தற்போது தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அவற்றை தடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கூடங்குளம், ஸ்டெர்லைட் போன்ற விஷயங்களின் போது வெளிநாட்டு நிதிகள் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சனை என்று காரணங்களை கூறி பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்த திட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தடுக்க பார்ப்பதாகவும் அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த ஒரு கருத்துக்கள் காரணமாக தற்போது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News