நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்விக் கொள்கை தேவை - பொட்டில் அடித்தாற்போல் சொன்ன ஆளுநர்!

நாட்டின் தற்போதைய வளர்ச்சிக்கு புதிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக கவர்னர் R.N.ரவி குறிப்பிட்டு இருக்கிறார்.

Update: 2022-12-11 09:07 GMT

நம் நாடு பொருளாதார, பண்பாடு ஆன்மீக ரீதியாக முன்னேற புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் R.N.ரவி பல்கலைக்கழக விழாவில் தற்போது பேசியிருக்கிறார். அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக இந்திய பல்கலைக் கூட்டமைப்பு ஆதரவுடன் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாட்டு மையம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ரவி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் குறிப்பிடுகையில், கல்வி முறை என்பது சமூகம் நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும். தற்போது நாம் பின்பற்றும் கல்வி முறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்  அவர்களால் சுமார் 60-80 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுவரப்பட்டது.


ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைத்து தரப்பின் முயற்சியில் எதிர்காலத்தை மையமாகக் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலும் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. விரைவில் அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார்.


ஏனெனில் இக்குழு தனிப்பட்ட கட்சியோ , பிற ஆன்மீக அமைப்பு சார்ந்ததோ வடிவமைக்கவில்லை. நம் நாடு பொருளாதார பண்பாடு ரீதியாக முன்னேற உறுதுணையாக இருக்கும், விவேகானந்தர் கண்ட புதிய பாரதத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கை உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் புதிய கல்விக் கொள்கையின் படி, ஒரே கல்வி முறை வேற்றுமையில் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News