12-ம் வகுப்பு தமிழ் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்: உண்மையை மூடி மறைக்கும் தமிழக கல்வித்துறை?

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பொது தேர்வு 50,000 மாணவ மாணவிகள் எழுத வரவில்லை.

Update: 2023-03-19 01:57 GMT

12 ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த 13ம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் தேர்வில் சுமார் 50 ஆயிரத்து 674 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை ஆப்சென்ட் என்ற புள்ளி விவரத்தை அரசு தேர்வு துறை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஆங்கில தேர்வு எத்தனை பேர் வரவில்லை என்பதை மறுத்துவிட்டது. புள்ளி விவரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பு இருந்தது. குறிப்பாக தமிழ் தேர்வில் இத்தனை மாணவர்கள் வரவில்லை என்பதை அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த மறுநாள் நடந்த ஆங்கிலே தேர்வு எத்தனை பேர் எழுதவில்லை என்ற புள்ளி விவரத்தை அரசு தேர்வு துறை வெளியிட தவிர்த்து விட்டது.


அது பற்றி தேர்வு துறை உயர் அதிகாரி தொடர்பு கொண்டு கேட்டுப்பொழுது அவர் விவரத்தை வெளியிட முடியாது. நீங்களாக இவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பதை போட்டுக் கொள்ளுங்கள் என்பது மாதிரி கூறியிருக்கிறார். அதைப்போல் நேற்று நடந்த 11-ம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கான தேர்வு முடிந்த பிறகும் எத்தனை பேர் தேர்வு எழுத வரவில்லை என்ற விபரமும் தேர்வு துறையினால் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இது குறித்து கல்வியாளர்கள் கூறும் பொழுது, புள்ளிவிவரத்தை வெளியிட்டால் தானே அந்த விஷயம் பெரும் புயலாக பூதாகரமாக மாறும்.


அதைப் பற்றி வெளியிடாமல் விட்டால் அதைப்பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது தான் தற்போதைய தமிழக அரசின் தேர்வு துறையின் நிலைப்பாடு என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். ஆனால் தமிழ் தேர்வில் ஏன் இத்தனை மாணவர்கள்? குறிப்பாக 50,000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் வரவில்லை என்பது தெரியவில்லை என்று ஆசிரியர்களுக்கு இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News