புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழ்நாடு அரசு என்ன செய்தது... யோசிக்க வேண்டிய விஷயம் தான்!

புலிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-04-15 04:17 GMT

சட்டசபையில் வனத்துறை சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது ஆத்மிகா உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன தன்னுடைய கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க ஆட்சியில் வனத் துறையின் பரப்பு அதிகரிக்கப்பட்டது. அதிக அளவில் மரக்கன்றுகளும் ஏராளமாக நடப்பட்டன. உங்கள் ஆட்சியில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன? காடுகளின் பரப்பு எவ்வளவு சதவீதம் அதிகாரிக்கப்பட்டுள்ளது? என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு இருந்தார்.


வனத்துறையில் தற்பொழுது பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அது அளவில் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் வேட்டை தடுப்பு காவலர்களின் எண்ணிக்கை என்பது 48 ஆக இருந்து 10 ஆக தற்போது குறைந்து இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை தேவை எங்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்கான தொகுப்பு 10,000-திலிருந்து, பன்னிரண்டாயிரம் ஆக உயர்த்தி அறிவித்தோம்.


அதை நீங்கள் 20 ஆயிரம் ஆகும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் மேலும் புலிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் 40 சதவீதம் உயர்ந்து உள்ள புலிகள் எண்ணிக்கை குறைவிற்கு என்ன காரணம் என்பதை அரசு ஆராய வேண்டும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை தேவை என்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட சில பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அவற்றிற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News