கோவில் பணத்தில் முதியோர் இல்லங்களா? கோர்ட்டில் அரசு அளித்த உத்திரவாதம்!
கோவில் பணத்தில் முதியோர் இல்லங்கள் வழக்கில், தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் முக்கியமான உத்தரவை அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களின் வருவாயில் இருந்து முதியோர் இல்லங்கள் துவங்கப்பட்டது குறித்து சமீபத்தில் அரசு நீதிமன்றத்திற்கு விளக்கம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இதன்படி வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் கோவில் நிதியில் இருந்து சுமார் 16.30 கோடி அளவிலான தொகை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் இருந்து 13.5 கோடி மற்றும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்து 15.20 கோடி அளவிலான நிதியை பயன்படுத்தி முதியோர் இல்லங்கள் தொடங்குவது தொடர்பாக கடந்த மாதம் ஜனவரி 12ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
இதை எதிர்த்து போராடும் டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்படி கோவில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே இது சம்பந்தப்பட்ட முடிவுகளில் இந்து சமயத் துறை எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்றும் நீதி மன்றம் சார்பில் கூறப்பட்டது.
மேலும் அறங்காவலர்கள் நியமனத்திற்காக அரசு குழுக்கள் அமைந்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறியபோது கோவில் நிதியை அரசாங்கம் பயன்படுத்த முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து மனுவுக்கு உரிய பதிலை குறித்து அவகாசத்திற்குள் வழங்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அதுவரை கோவில் நிதியை பயன்படுத்த போவதில்லை என உத்திரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Samayam News