நூறு ஆண்டு பழமையான சிவன் கோவில் - கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்பொழுது?

நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுமா இந்து சமய அறநிலையத் துறைக்கு கேள்வி?

Update: 2022-10-04 04:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் பராமரிப்பு இன்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவன் கோயில் உடனடியாக சீரமைத்து புதுப்பித்து குடமுழுக்கு நடத்திட பொதுமக்கள் தற்போது கோரிக்கை ஒன்றை முன் வைத்து உள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அமைந்துள்ளது தான் மங்களாம்பிகை அனந்தேஸ்வரமுடையார் திருக்கோவில். இந்த சிவன் கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்திய கோவில் என்று வரலாறு கூறுகிறது அம்பிகை மட்டுமின்றி துர்கா தேவி வள்ளி தேவையான சமூக சுப்பிரமணியர் லிட்டர் பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன நூற்றாண்டுகளை கடந்த இந்த கோவில் பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால் இந்த கோயில் சிதலமடைந்து காணப்படுகிறது.


இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தி தர வேண்டும் என்று மக்கள் தற்போது கோரிக்கையை முன்வைத்து உள்ளார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த கோவிலை சீரமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் சார்பில் கோவிலில் களம் இறங்கினார்கள். ஆனால் அப்போது ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இந்த முடிவை பக்தர்கள் கைவிட்டு இருந்தார்கள்.


நூற்றாண்டுகளைக் கடந்த கோவில் என்பதால் தற்போது இந்த கோவில் இடையக்கூடிய நிலையில் இருக்கின்றது. இதன் காரணமாக பக்தர்கள் வந்து வழிபடுவதற்காக சுவாமி சிலைகளை சிறிய கொட்டகையின் கீழ் வைத்து பக்தர்கள் வழிபாட்டிற்காக வெளி வைத்து வணங்குகிறார்கள். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த கோவிலை உடனடியாக சீரமைத்து குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்று கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. Input & Image courtesy: News 18

Tags:    

Similar News