+12 மாணவர்கள் கனவில் கபடி ஆடப்பார்த்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - கடுப்பில் மாணவர்கள்!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏன் தெரியுமா?

Update: 2023-05-09 02:03 GMT

2023 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே எட்டாம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என்று தமிழக பள்ளி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று காலை 9: 30 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் ஒன்பது முப்பது மணிக்கு தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேர்வு முடிவு வெளியாகவில்லை இதன் காரணமாக தமிழக மாணவர்களுக்கு பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.


9.30 மணிக்கு ரிலீஸ் இல்லை, ஏற்கெனவே அறிவித்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வு முடிவுகள் காத்துக் கொண்டு இருந்தார்கள். தேர்வு முடிவுகள் தாமதமாகவே வெளிவந்தது பெரும் அதிருப்தி ஏற்படுத்துகிறது. மாணவ, மாணவியர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இருந்தாலும் சரியான நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.


இதனிடையே 12 ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திருச்சியில் சில நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னைக்கு வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முடிவுகள் வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைச்சருக்காக அதிகாரிகள் காத்துக் கொண்டு உள்ளனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News