சென்னையில் படுமோசமான வாக்குப்பதிவு நடந்தது ஏன்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவலை கூறியிருந்தது. இதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியிருந்தது.

Update: 2022-02-20 02:33 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவலை கூறியிருந்தது. இதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் மொத்தமாக 12,838 வார்டுகள் இருக்கிறது. இதற்கான தேர்தல் நேற்று (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதே போன்று மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 31,150 வாக்குப்பதிவு மையங்களில் 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்ற பல இடங்களில் அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்பட்டது. சென்னையில் பல இடங்களில் கள்ள ஓட்டுப்போட்டதாக திமுகவினரை அதிமுகவினர் பிடித்த நிகழ்வுகளும் நடைபெற்றது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் ஓரளவிற்கு வாக்குப்பதிவு வேகமாக நடைபெற்றது. ஆனால் சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. விடுமுறை விடப்பட்டதால் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் வாக்குப்பதிவு குறைந்திருக்கலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. ஆனால் சென்னையில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஆளும்கட்சியினர் ரகளையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாலேயே மக்கள் வாக்களிக்க வரவில்லை என்ற தகவலும் பேசப்படுகிறது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News