மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம்.!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக 100க்கும் குறைவாகவே கொரோனா தொற்று இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் பெருமூச்சி விட்டனர். கொரோனா எப்படியும் தமிழகத்தை விட்டு விலகிவிட்டது என்று.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக 100க்கும் குறைவாகவே கொரோனா தொற்று இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் பெருமூச்சி விட்டனர். கொரோனா எப்படியும் தமிழகத்தை விட்டு விலகிவிட்டது என்று.
ஆனால் தற்போது கொரோனா அனைவரையும் அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் தொடக்கத்தில ஏற்பட்டதை போன்று மறுபடியும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு 945ஆக பதிவாகியுள்ளது. அதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 395 பேருக்கு உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களை விட மீண்டும் சென்னையில் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமின்றி பொது இடங்களுக்கு செல்லும்போது அனைவரும் முககவசம் அணிந்து சென்றால் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.