தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்ச்சி.. கொரோனா 1600யை தாண்டியது.!
தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு முறையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு சில மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு தொற்று பரவியதை போன்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு முறையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1,023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையைவிட பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.