இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2021-03-12 06:03 GMT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.




 


கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு இருந்து வந்த நிலையில், சமீபகாலமாக தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் இயங்காத காரணங்களில் ஒரு சவரன் தங்கநகை ரூ.35 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின்னர் விலை குறைந்து ரூ.33 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதே போன்று கடந்த ஒரு சில வாரங்களாக தங்கத்தின் விலையில் குறைந்த அளவில் மட்டுமே ஏற்றம் இருந்து வருகிறது. இதனால் சுபமுகூர்த்தம் மற்றும் விஷேஷங்களுக்கு தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


 



இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.33,680க்கு விற்பனையாகிறது. அதன் படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.70 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News