இன்று இறுதி விசாரணை! விடுதலை ஆவாரா பேரறிவாளன்?

இன்று இறுதி விசாரணை! விடுதலை ஆவாரா பேரறிவாளன்?

Update: 2021-01-20 09:48 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது.

ராஜீவ்காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட பலர் இன்னும் சிறையில் அடைப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பலரும் சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனாலும் இன்னும் அவர்களுக்கு விடுதலை கிடைத்த பாடில்லை.

தற்போதையை முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த தீர்மானம் குறித்து ஆளுநர் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், 30 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு எவ்விதமான முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. 7 பேர் விடுதலை குறித்து தமிழகம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News