இன்று முதல் துவங்குகிறது கத்தரி வெயில்: வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்.!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது.

Update: 2021-05-04 03:18 GMT

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது.




 


வருடம் தோறும் கோடை காலங்களில் நிலவும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்று துவங்க உள்ளது. பொதுவாக கத்தரி வெயில் தொடங்கி கிட்டத்தட்ட 25 நாட்கள் இந்த வெப்பம் நீடிக்கும்.

இந்த 25 நாட்களிலும் மற்ற நாட்களை விட வெயில் அதிகமாகவே இருக்கும். எனவே வெளியில் செல்பவர்கள் முன்கூட்டியே செல்வது நல்லது.


 



இளநீர், நுங்கு, மோர், உள்ளிட்ட நீர் சத்து அதிகம் உட்கொள்ளலாம். மேலும், பருத்தியிலான ஆடைகளை உடுத்த வேண்டும்.

Similar News