கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் 600க்கும் குறைவாகவே காணப்படுகிறது. அதே போன்று உயிரிழப்புகளும் மிகவும் குறைந்து வருகிறது.
கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 490 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,467ஆக குறைந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்கள் 301 பேர் ஆண்கள், 193 பேர் பெண்கள். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.