தொப்பூர் சாலை விபத்து.. தப்பியோடிய ஓட்டுநர் அதிரடியாக கைது

தொப்பூர் சாலை விபத்து.. தப்பியோடிய ஓட்டுநர் அதிரடியாக கைது

Update: 2020-12-13 13:37 GMT

தருமபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கனரக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில வந்த கனரக லாரியால் நிகழ்ந்த விபத்து தொடர்பாக வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தருமபுரி அடுத்துள்ள தொப்பூர் கண்வாய் சரிவுப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் மினிலாரி மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அந்த நேரத்தில் சிமெண்ட் மூட்டைகளுடன் வேகமாக வந்த கனரக லாரி ஒன்று அணிவகுத்து நின்றிருந்த வாகனங்கள் மீது மின்னல் வேகத்தில் மோதியது.

அந்த பகுதி சரிவான சாலை என்பதால் 12 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. சுமார் 6 கார்கள் நொறுங்கியது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டது. இதனையடுத்து மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 3 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை இறுதியாக கைது செய்தனர். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Similar News