2023 பிப்ரவரி மாதத்தில் GST வரிவசூல் 19% அதிகரிப்பு: மொத்த GST வருவாய் ரூ. 1,49,577 கோடி!

தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் GST வரிவசூல் 19% அதிகரித்து ரூ 8,774 கோடியாக உள்ளது.;

Update: 2023-03-03 00:49 GMT
2023 பிப்ரவரி மாதத்தில் GST வரிவசூல் 19% அதிகரிப்பு: மொத்த GST வருவாய் ரூ. 1,49,577 கோடி!

2023 பிப்ரவரி மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த GST வருவாய் ரூ 1,49,577 கோடியாகும், இதில் மத்திய CGST ரூ 27,662 கோடி மாநில SGST ரூ 34,915. ஒருங்கிணைந்த GST ரூ 75,069 கோடி, செஸ் வரி ரூ 11,931 கோடி ஆகும். வழக்கமான பகிர்வின்படி, ஒருங்கிணைக்கப்பட்ட GST யிலிருந்து ரூ 34,770 கோடி சி.ஜி.எஸ்.டி க்கும் ரூ. 29,054 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி க்கும் அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது. வழக்கமான பகிர்வுக்குபின் 2023 பிப்ரவரி மாதத்தில் சி.ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ 62,432 கோடியாகவும் எஸ்.ஜி.எஸ்.டி மூலம் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ 63,969 கோடியாகவும் உள்ளது.


மேலும் 2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையாக உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடாக ரூ 16,982 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ரூ 1,33,026 கோடி என்பதைவிட 12% அதிகமாகும். ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் அதிகபட்சமாக செஸ்வரி வசூல் ரூ 11,931 கோடியாக உள்ளது. பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் ஒப்பீட்டு அளவில் வருவாய் வசூல் குறைவாக இருக்கும்.


தமிழ்நாட்டில் 2022 பிப்ரவரி மாதத்தில் ரூ 7,393 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி வரி வசூல் 2023 பிப்ரவரியில் 19% வளர்ச்சியடைந்து ரூ 8,774 கோடியாக உள்ளது. கடைசியாக 2023 பிப்ரவரியில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ1,49,577 கோடி; கடந்த ஆண்டு இதே மாத்ததின் ஜி.எஸ்.டி வருவாயைவிட இது 12% அதிகமாகும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News