கோவை மாவட்டத்தில் தொடரும் சோகம்! வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானை!

கோவை மாவட்டத்தில் தொடரும் சோகம்! வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானை!

Update: 2021-01-29 09:51 GMT

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரக பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் வனஉயிரின ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சிறுமுகை பெத்திகுட்டை என்ற பகுதியில் 25 வயது பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவ குழுவுக்கு தகவல் அளித்தனர்.

யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக கோவை, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகளின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி என்ற பகுதியில் உணவுத்தேடி வந்த யானையின் மீது எரிகின்ற டயரை வீசிய சம்பவத்தால், யானை படுகாயமடைந்து கடந்த 2 மாதங்களாக சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் உயிரிழந்தது. இந்த குற்றச்சம்பவத்திற்கு காரணமாக ரிசார்ட் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர்தான் வெளியுலகிற்கு தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழக வனப்பகுதிகளில் யானைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதே தோன்றுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கோரிக்கையும் ஆகும்.
 

Similar News