உருமாறிய கொரோனா எதிரொலி.. தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரங்கு நீட்டிப்பு.!

உருமாறிய கொரோனா எதிரொலி.. தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரங்கு நீட்டிப்பு.!

Update: 2020-12-31 17:35 GMT

இங்கிலாந்தில் புதியதாக உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டுடன் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசுகள் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்பாக காணும் பொங்கலுக்கு மெரினா கடர்கரையில் பொது மக்கள் கூட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வழிப்பாட்டு தளங்களில் வழக்கமான நேரங்களில் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். 

புதுச்சேரி, ஆதிரா, கர்நாடகா தவிர மற்ற  பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ பாஸ் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவை தடுக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News