போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.!
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.!
போக்குவரத்து ஊழியர்கள் ஒரு சில அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் திமுக தூண்டுதலின் பேரில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது. தங்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழக அரசை கண்டித்து சில அமைப்புகளை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதன் படி இன்று பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியுள்ளது. ஆனால் வழக்கம் போல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
அது மட்டுமின்றி பேச்சு வார்த்தை முடியும் வரை ரூ.1000 தொகுப்பூதியம் சேர்த்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
மேலும் இன்று பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.