கொரோனா சிகிச்சை.. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது. அதே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும்.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90க்குள் இருந்தால், கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு மையங்களில் அனுமதிக்கலாம். மேலும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டுமே அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம்.