7 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட்.. பட்டாசு வெடித்து, வியாபாரிகள் கொண்டாட்டம்.!

7 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட்.. பட்டாசு வெடித்து, வியாபாரிகள் கொண்டாட்டம்.!

Update: 2020-11-27 12:09 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கி, பள்ளி உள்ளிட்ட அனைத்திற்கும் காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது. 


அதே போன்று திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டும் மூடப்பட்டது. இந்த மார்க்கெட்டில் 3000 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது.


இந்நிலையில், மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடக்கோரி திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது, காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில், 7 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் காந்தி மார்க்கெட்டை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கிடைத்ததால் வியாபாரிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Similar News