திருச்சியில் கனமழை: 500 வீடுகளை சூழ்ந்த நீர்: படகுகள் மூலம் வெளியேறும் மக்கள்!

திருச்சியில் பெய்து வரும் கனமழையால் கோரையாற்றில ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குழுமணி சாலையில் உள்ள செல்வநகர், அரவிந்த் நகர், சீதாலட்சுமி நகரில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே தீயணைப்பு படையினர் அப்பகுதியில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

Update: 2021-11-27 09:52 GMT

திருச்சியை சுற்றி பெய்துவந்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோரையாற்றின் இரண்டு கரையும தொட்டுக்கொண்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. மேலும், திருச்சியிலிருந்து மணப்பாறை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்வதற்கு மிகவுள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

செல்வநகர், அரவிந்த் நகர், சீதா லட்சுமி நகர் மற்றும் புதிய குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீரில் சிக்கிய 40 பேரை மீட்பதற்கான பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai

Tags:    

Similar News