மேம்பாலத்தில் மேலே ரயில் கடக்க கீழே காத்திருக்கும் வாகன ஓட்டிகள்: காரணம் என்ன?
மேம்பாலத்தின் மேலே ரயில் கடக்க கீழே காத்துக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் காரணம் என்னவாக இருக்கும்.
திருச்சி மேலப்புதூரில் ரயில் மேம்பாலத்தில் செல்லும் பொழுது கீழே நின்று இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் காத்திருக்கின்றன. இதனால் இந்த பகுதியில் சற்று நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் அதற்காக காத்திருக்கலாம். ஆனால் இங்கு ரயில் மேம்பாலத்தில் கடக்கும் பொழுது கீழே உள்ள வழியாக செல்லாமல் வாகன ஓட்டிகள் அந்த ரயில் முழுமையாக சென்ற பிறகுதான் அந்த பாதையை கடந்து செல்கிறார்களாம்.
திருச்சி மேலபுதூரில் உள்ள இந்த ரயில்வே பாதையானது மறைந்த எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மேலும் இங்கு கரூர், ஈரோடு, கோவை, பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் இந்த பாதை வழியாக கடந்து செல்கின்றன. மேலும் இந்த பாதையை ரயில் கடக்கும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே ஒரு இரண்டு அடிக்கு பின்னால் நின்று காத்திருக்கிறார்கள். ஏனென்றால் இங்கு ரயில் இந்த பாதையை கடக்கும் பொழுது சிறுநீர் கழிவுகள் மற்றும் இதர நீர் கழிவுகளும் சாலையின் ஓரத்தில் அதிகமாக விழுகின்றது. இதனை முன்பு அறிந்த நன்கு வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனத்தை இங்கு நிறுத்தி வைக்கிறார்கள் இதன் காரணமாக இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இவற்றை சரி செய்யும் பொருட்டு ரயில்வே நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியது விகடன் குழு, தெற்கு ரயில்வே உதவி பொறியாளர் அவர்களிடம் இது பற்றி பேசினார்கள். அவர் இது பற்றி கூறுகையில், இப்படி ஒரு இடையூறு மக்களுக்கு ஏற்படுவது இதுவரை தகவல் கிடைத்தது கிடையாது. இப்போதுதான் முதல்முறையாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். மேலும் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Input & Image courtesy: Vikatan News