சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (பிப்ரவரி 20) தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமிக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி கோவில் மாடவீதிகளில் வலம் வர இருக்கிறார். நாளை இரவு புன்னை மர வாகனம், 21ம் தேதி காலை சேவு வாகனம், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலா வர இருக்கிறார். அதற்கு அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வகையிலான பூஜைகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறுகிறது.
மேலும், 25ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது. காலையில் ஆனந்த வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் சாமி வீதி நடைபெறுகிறது. 26ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்றைய நாள் அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Source, Image Courtesy: Maalaimalar