லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.? அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு.!

லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு.? அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு.!

Update: 2020-12-16 18:36 GMT

அனைத்து நிறுவன வேகக் கட்டுப்பாட்டு கருவிகளுக்கும் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற 27ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் கூறியதாவது: எம்.ஆர்.குமாராசாமி, வேக கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கும் 49 நிறுவனங்களுக்கு அப்ரூவல் உள்ள நிலையில், 12 நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும், வாகன உரிமை புதுப்பித்தலை அனைத்து பகுதிகளிலும் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்கவும், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என கேட்டுகொண்ட குமாரசாமி, இதனை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே அரசு உடனடி தலையிட்டு இதற்கு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Similar News