போலி ஆவணங்கள் மூலம் கல்லூரியில் பேராசிரியர்கள் - சிக்கிய பின் என்ன ஆனது?

Update: 2022-04-29 13:56 GMT

சென்னையில் மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் போலியான ஆணவங்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ள நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மிகவும் பழமையான கல்லூரி என்றால் அது மாநிலக் கல்லூரி ஆகும். இவை சென்னை பல்கலைக்கழகத்துக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. இது 1840ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இக்கல்லூரியில் பணியாற்றி வந்த இரண்டு உதவிப் பேராசிரியர்கள் போலியான ஆவணங்களைக் அளித்து பணியில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அவர்களை தமிழ்நாடு உயர்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் கடந்த 2009ம் ஆண்டு ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியராக காமாட்சி மற்றும் 2011ம் ஆண்டு சேதுலாக இருவரும் போலியான ஆவணத்தை வழங்கி பணியில் சேர்ந்துள்ளனர். இதே போன்று மற்றவர்களின் ஆவணங்களையும் கல்லூரி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இவர்கள் மீது விரைவில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News