அடுத்த துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினா... அமைச்சரவை மாற்றத்தில் நிகழப்போவது என்ன?
அமைச்சரவை மாற்றத்தின் போது அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் என்ற பேச்சு அடிபடுகிறது.
தி.மு.க சார்பில் முதலமைச்சரின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவிற்காக திருச்சி மாவட்ட 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற ஒரு தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களின் கண்காட்சி திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. குறிப்பாக இந்த நிகழ்ச்சி 23ஆம் தேதி ஏப்ரல் மாதம் தொடங்கியது, இந்த கண்காட்சி நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஒரு நிகழ்ச்சியில் நிறைவு விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த ஒரு நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விளக்கம் போல் சாதுர்யமாக பதில் கூறி பேட்டியை நிறைவு செய்து இருக்கிறார். மேலும் இந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த கருத்துக்கள் பற்றி உங்கள் பார்வை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி அவர்கள் அந்த சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவதை நீங்கள் தானே? என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பு கூட பல்வேறு பேட்டிகளின் போது, தங்களுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறதே அது உண்மையா? என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, அப்போதும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் பதவி எல்லாம் பெரிய பதவி. தற்போது வரை நான் தி.மு.கவில் இளைஞர் அணி செயலாளராக இருப்பதில் நிறைவாகத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். இருந்தாலும் சில நாட்களுக்கு பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அதை போல் துணை முதல் அமைச்சர் பதவியும் விரைவில் வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
Input & Image courtesy: Zee News