தமிழ்நாட்டில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள்.. இனி விரைவில் நிகழும் மாற்றம்..
சர்வதேச விசயங்களில் இந்தியாவின் முடிவை ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறது.;
கடந்த 9 ஆண்டுகளில் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சர்வதேச விசயங்களில் இந்தியாவின் முடிவை ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார். திருச்சியில் நடைபெற்ற 6வது வேலைவாய்ப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுகிறது என்று கூறினார். இந்த வேலைவாய்ப்பு விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இன்று 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்சி விழாவில், இந்திய ரயில்வே, அஞ்சல் துறை, பாதுகாப்புத்துறை, மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெருந்தொற்றுக் காலத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தங்களை சார்ந்து இருக்கும் என்று மற்ற உலக நாடுகள் எண்ணிய வேளையில், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கும் வழங்கிய பிரதமரின் செயல் பாராட்டத்தக்கது என்று தெரிவித்தார்.
Input & Image courtesy: News