முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்.. மசோதா இன்று தாக்கல்.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்.. மசோதா இன்று தாக்கல்.!

Update: 2021-02-05 09:20 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரது பணிக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவர் வசித்து வந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றியது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் புதியதாக பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. இதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
 

Similar News