தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமன விதிகள் என்ன?

தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் நடைமுறை விதிகள்.;

Update: 2022-04-27 01:51 GMT
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமன விதிகள் என்ன?

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக தற்போது உள்ள நடைமுறை விதிகள் என்னென்ன? என்பது விளக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் களை நியமிப்பது தொடர்பான விவகாரம் பல்வேறு பிரச்சினைகளுக்கு உருவெடுத்துள்ளது. மேலும் அவற்றில் தவிர்ப்பதற்காக தற்போது நடைமுறை விதிகளின் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 


தற்போதைய விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் அமைத்து உத்தரவிடுவார். இந்த குழுவில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், ஆளுநர் மற்றும் தமிழக அரசின் சார்பில் தலா ஒரு பிரதிநிதி இடம்பெறுவர். இந்த பிரதிநிதி கொண்ட குழுக்கள் துணைவேந்தரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 


அதைத்தொடர்ந்து தமிழக அரசு தேடுதல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டதும், காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு ஆளுநரின் உத்தரவுப்படி இதுதொடர்பான அறிவிப்பு பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியிடப்படும். மேலும் அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தற்போது வரை கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News