"தெய்வமே! மன்னிச்சுடு" - கோவில் உண்டியலில் திருடிய பணத்தை திருப்பி கோவிலில் வீசிச்சென்ற களவாணி!
கோவில் உண்டியலில் திருடிய பணத்தை மீண்டும் ஒரு வாரம் சென்று கோவிலுக்கு வந்து தூக்கி வீசி சென்ற மர்ம நபர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து அரசன் பட்டு கிராமம் மணிமுத்தாறு அருகே பால தண்டாயுதபாணி என்ற முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் சம்பத் என்பவர். இவர் 12 டிசம்பர் அன்று பூஜை செய்வதற்காக கோவிலில் நுழைந்து இருக்கிறார். அப்பொழுதுதான் அவருக்கு தெரியவந்தது, கோவில் கதவு உடைக்கப்பட்டு கோவில் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கோவில் உண்டியலை உடைத்து யாரோ பணத்தை திருடி கொண்டு சென்று விட்டார்கள்? என்பதை அறிந்தார்.
பிறகு இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் உண்டியல் பணத்தை திருடி சென்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக திருடி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பூஜை செய்வதற்காக வந்திருந்தார். பூசாரி அப்பொழுது கோவில் வளாகத்தில் 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் .
பின்னர் இது குறித்து ஊர் தலைவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சங்கராபுரம் போலீசாரும், ஊர் பெரியவர்களும் விரைந்து வந்து கோவிலில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை ஆய்வு செய்தனர். இதில் மொத்தமாக ரூபாய் 17,000 கிடைத்திருக்கிறது. போலீஸ் விசாரணையில் உண்டியல் பணத்தை திருடி சென்று மர்மநபர் ஒரு வாரம் கழித்து காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் சென்று வீசி இருப்பது தெரியவந்துள்ளது. இதை எடுத்து வீசி சென்றது யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசார் களம் இறங்கி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi