சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை: அரசியல் எதுவும் இல்லை! மாணவர் பேரவை தகவல்!

Update: 2022-05-03 13:30 GMT

மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர். அதே சமயம் யாரும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என்று மாணவர் பேரவை தலைவர் பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதலாமாண்டு மாணவர்களுக்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக தொலைக்காட்சிகள் கருத்து பரப்பியது. இதனால் இந்த விவகாரத்திற்கு தொடர்புடையதாக கூறி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சமஸ்கிருதம் குறித்து மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை, மொழிபெயர்க்கப்பட்ட மகரிஷி சரத் ஷபத் உறுதிமொழியைத்தான் ஆங்கிலத்தில் மாற்றி ஏற்றோம். இதனை இணையதளத்தில் இருந்து நாங்களே எடுத்தோம். சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எவ்வித அரசியலும் இல்லை. உறுதிமொழி குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் நாங்கள் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் மாணவர் பேரவை தலைவர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News