சூலூரில் தடுப்பூசி கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்.!

கோவை மாவட்டம், சூலூர் அரசு பொது மருத்துவமனையில் தினுமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2021-06-24 08:56 GMT

கோவை மாவட்டம், சூலூர் அரசு பொது மருத்துவமனையில் தினுமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி இருப்பை விட பொதுமக்கள் அதிகளவு மருத்துவமனையில் குவிந்து வருவதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது. அது மட்டுமின்றி தடுப்பூசி போடுவதற்காக காலை 5 மணி முதலே மருத்துவமனை வாயில் முன்பாக பொதுமக்கள் கூடிவிடுகின்றனர்.

இந்நிலையில், இன்று 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி இருந்த நிலையில், 200க்கும் அதிகமானோர்கள் சூலூர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் பாதிப்பேருக்கு தடுப்பூசி இல்லாததால் கோபம் அடைந்த அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், வரபோகின்ற நாட்களில் தடுப்பூசி அதிகளவு சூலூர் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News