வைகுண்ட ஏகாதசி திருவிழா: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு!
இதே போன்று பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்று அழைக்கப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வழக்கம் போன்று மார்கழி மாதம்தான் நடத்தப்படும். அதாவது 19 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்துடன் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்க காட்சி அளித்தார்.
இதே போன்று பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்று அழைக்கப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சி அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை (டிசம்பர் 14) 4.45 மணிக்கு நடைபெற்றது. அதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்களை அணிந்த வாறு தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் என்று அழைக்கப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார். அதன்படி முதன் முதலாக ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதனை காண்பதற்காக உள்ளூர் பக்தர்கள் முதல் பல்வேறு நாடுகளிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
Source, Image Courtesy: Daily Thanthi