தடைகளை உடைத்துக்கொண்டு இன்று தருமபுரிக்கு வரும் வேல் யாத்திரை.!

தடைகளை உடைத்துக்கொண்டு இன்று தருமபுரிக்கு வரும் வேல் யாத்திரை.!

Update: 2020-11-17 08:46 GMT

தமிழக பா.ஜ.க-வின் சார்பில், நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ‘வேல் யாத்திரை’ நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த்தொற்றைக் கருத்தில்கொண்டு, அனுமதி மறுத்ததோடு, ‘வேல் யாத்திரை’க்கு தடை விதித்தும் உத்தரவிட்டது அரசு. 
இந்துக்களின் உரிமையை காப்பதற்காக வேல் யாத்திரையை நடத்த வேண்டிய மும்முரத்திலிருந்த தமிழக பா.ஜ.க., கடந்த 6-ம் தேதி தடையை மீறி திருத்தணி முருகன் கோயிலுக்கு ‘வேல் யாத்திரை’ கிளம்பியது. அப்போது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் கிளம்பிய இந்த ‘வேல் யாத்திரை’க்குழுவை தமிழக போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில், 8-ம் தேதி சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலிலிருந்து மறுபடியும் பா.ஜ.க-வினர் வேல் யாத்திரையைத் தொடங்க, மறுபடியும் காவல்துறையினர் பா.ஜ.கவினரைக் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். அடுத்து செங்கல்பட்டிலிருந்து பா.ஜ.க-வினர் வேல் யாத்திரையைத் தொடங்க அப்போதும், காவல்துறை கைது செய்தது.

தமிழக அரசின் தடையை மீறி பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாக யாத்திரை கிளம்புவதும், காவல்துறையினர் கைது செய்வதும் தொடர்கதையாகி வருவதைக் கண்டு, இந்துக்களிடையே வேகம் அதிகரிக்க தொடங்கியது. திமுகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் எப்படி அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரைக்கு மட்டும் ஏன் இவ்வளவு தடைகள் என்று இந்துக்கள் அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், இன்று (17ம் தேதி) தருமபுரி மாவட்டத்திற்கு வேல் யாத்திரை நிகழ்ச்சி பாஜக தலைவர் முருகன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியானது தருமபுரி நகரில் உள்ள வள்ளலார் திடலில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் எல்.அனந்தகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் ஆர்.பி.ஆறுமுகம், மாவட்ட பிரச்சார பிரிவு துணை தலைவர் டி.ராஜதுரை, மாவட்ட செயலாளர்கள் பிரச்சார பிரிவு சரோஜினி கிரிநாதன், பி.சி.மணி, சிவானந்தம், முத்துசாமி, பழனி, சாமிநாதன், சுரேஷ், பென்னாகரம் ஒன்றிய தலைவர் வடக்கு பிரச்சார பிரிவு ரங்கசாமி ஆகியோர் இரவு பகலாக வேல் யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Similar News