"காதலர் தினமா? சீரழிவு தினமா?" போஸ்டர்களால் தமிழகத்தில் பரபரப்பு!

காதலர் தினத்தை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Update: 2021-02-14 17:11 GMT

பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமன் முகமது நபியை இழிவாகப் பேசியதாக குற்றம் சாட்டி அவர் மீது புகார் அளித்து சிறையில் அடைத்ததோடு நில்லாமல் பொதுக் கூட்டங்கள் போட்டு அவரது காலை எடுக்க வேண்டும், தலையை எடுக்க வேண்டும், இந்தியாவுக்கே பாடம் கற்பிக்க வேண்டும் என்று பல முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையைத் தூண்டி வருகின்றனர். 

மார்வாடி சமூகத்தினர் தான் கல்யாணராமன் போன்றவர்களுக்கு‌ நிதி உதவி செய்வதாகக் கூறி அவர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேறுமாறும் இல்லையென்றால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்றும் நோட்டீஸ் வழங்கி‌ தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற முஸ்லிம் அமைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.‌ இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், காதலிப்பது விபச்சாரம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி ஒவ்வொரு‌ ஆண்டும் காதலர்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இது இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் பொது இடங்களில் சந்திக்கும் காதலர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவதாக மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும் வருகின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் மத ரீதியாக காதலிப்பது தவறு என்று பிரச்சாரம் செய்வது பற்றி யாரும் பேசுவது இல்லை.

தற்போது இந்தியாவிலும் காதலர் தினம் பரவலாகக் கொண்டாடப்படும் நிலையில், "திருமணம் செய்யாமல் காதல் என்ற‌ பெயரில் ஆணும் பெண்ணும் இணைந்து பழகுவது விபச்சாரமே" என்றும் "காதலின் பெயரால் கற்பை இழக்க பிப்ரவரி 14 கொண்டாட்டம் தேவையா? சிந்திப்பீர்!" என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

"காதலர் தினமா? சீரழிவு தினமா?" என்றும் "ஒழுக்க வாழ்வை ஒழித்துக் கட்டும் தினம் தேவைதானா?" என்றும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதே போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் காதலிப்பவர்களை ஆபாசமான வார்த்தைகளில் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

குரானில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கோள் காட்டி காதல் ஒரு‌ மன நோய் என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நிக்காஹ் ஹலாலா போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுபவர்கள் எல்லாம் காதல் செய்வது விபச்சாரம் என்று பிரச்சாரம் செய்யலாமா என்று இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Similar News