தருமபுரியில் அரசு மானியத்துடன், உழவர்களால் திறக்கப்பட்ட மதிப்பு கூட்டுதல் மையம்.!
தருமபுரியில் அரசு மானியத்துடன், உழவர்களால் திறக்கப்பட்ட மதிப்பு கூட்டுதல் மையம்.!
நாடு முழுவதும் உழவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அது போன்று சிலவற்றில் மலர் அங்காடி, ஆயில் மில் வைப்பது, மற்றும் தானியங்களை பதப்படுத்துதல் போன்றவைகளுக்கு அரசு மானியம் அளிக்கிறது. முழு தொகையில் கால் பங்கு உழவர்கள் செலுத்துவார்கள். மூன்று பங்கு அரசு செலுத்தும். இது போன்ற திட்டத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் உழவர்களால் இன்று புதியதாக மதிப்பு கூட்டுதல் மையம் திறக்கப்பட்டது. இது விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதற்கான ஒரு சிறந்த வழிமுறை என்றும் கூறலாம்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், பாலவாடி கிராமத்தில் புதியதாக நல்லம்பள்ளி உழவர் உற்பத்தியாளர் குழு (என்கின்ற) பிளவர், ஆயில் மில் இன்று (23.11.2020) திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.