கோவை அரசு மருத்துவமனைக்கு 2 அமரர் ஊர்திகள்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வழங்கினார்.!
கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் இன்று அரசு மருத்துவமனைக்கு 2 அமரர் ஊர்திகளை வழங்கினார்.
கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் இன்று அரசு மருத்துவமனைக்கு 2 அமரர் ஊர்திகளை வழங்கினார்.
கோவையில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இதனிடையே பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அமரர் ஊர்தி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டி வசதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அதிகமானோர்கள் இறந்து விடும் சூழலில், அவர்களை எடுத்து செல்வதற்கு ஒரே அமரர் ஊர்தி மட்டும் இருந்துள்ளது. இதனையடுத்து இன்று இரண்டு அமரர் ஊர்திகளை அரசு மருத்துவமனைக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வழங்கினார். அவருடன் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.