வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 வருடங்களுக்கு பிறகு குட்டி ஈன்ற சிம்பன்சி குரங்கு.!

சென்னை, அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி எனப்படும் மனித குரங்குகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 4 இருந்தன. 20 வருடங்களாக அந்த மனித குரங்குகள் இனவிருத்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக 4 மனித குரங்குகள் மட்டுமே உயிரியல் பூங்காவில் இருந்தன.

Update: 2021-06-11 02:44 GMT

சென்னை, அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி எனப்படும் மனித குரங்குகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 4 இருந்தன. 20 வருடங்களாக அந்த மனித குரங்குகள் இனவிருத்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக 4 மனித குரங்குகள் மட்டுமே உயிரியல் பூங்காவில் இருந்தன.

இதனிடையே சில வருடங்களுக்கு முன்னர் அந்த 4 மனித குரங்கில் ஒரு பெண் மனித குரங்கு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துவிட்டது. அதனை தொடர்ந்து மற்றொரு ஆண் மனித குரங்கும் உயிரிழந்துவிட்டது. இதனால் பூங்கா ஊழியர்கள் மீதம் உள்ள ஒரு ஆண் மனித குரங்கும், பெண் மனித குரங்கும் சேர்த்து 2 மனித குரங்குகள் மட்டுமே இருந்தன. இதனை பத்திரமாக பூங்கா ஊழியர்கள் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இன விருத்தி அடையமால் இருந்த மனித குரங்கு தற்போது, இனவிருத்தி செய்துளளது. தற்போது பெண் குரங்கும், குட்டியும் நலமாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News