வாணியம்பாடியில் அரசு உத்தரவை மீறி தொழுகையில் ஈடுபட்ட முஸ்லீம்கள்: எச்சரிக்கை விடுத்த மாவட்ட எஸ்.பி.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட எஸ்.பி., டாக்டர் விஜய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-04-25 13:22 GMT

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் தியேட்டர்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. அது போன்ற உத்தரவுகளை பல்வேறு இடங்களில் மீறப்பட்டு வழிப்பாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட எஸ்.பி., டாக்டர் விஜய் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜப்ரபாத் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தி கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஜமாத் நிர்வாகிகளை அழைத்து மூடுவதற்கு எஸ்.பி. விஜய் குமார் உத்தரவிட்டார்.




 


மேலும், தமிழக அரசு அனைத்து வழிபாட்டு தளங்கள் மூட உத்தரவு பிரபித்தது. ஆனால் எப்படி தொழுகை நடத்தி கொண்டு இருக்கின்றீர்கள் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். இது பற்றிய தகவலை ஜமாத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஆகையால் தொழுகை முடிந்த உடன் மறு உத்தரவு வரும் வரை மசூதியை திறக்க மாட்டோம் என கூறினார்கள்.

மேலும், பலர் மசூதியை நோக்கி வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். ஜமாத் நிர்வாகிகளிடம் எஸ்.பி. கூறும்போது, இனிமேல் மசூதியை திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியது.

Similar News