வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு!
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு பணியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ஆணை சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவம் வன்னியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu