வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம்.!
அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இதனால் இந்த மசோதா சட்டமானது.
இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு மற்றும் மனுதாரர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி, மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.