நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் 24 மணி நேரம் கெடு! வக்கீல் நோட்டீசால் பரபரப்பு!
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லியோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜெய்பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான முதல் நாளே சர்ச்சைக்கு உள்ளானது.
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லியோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜெய்பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளியான முதல் நாளே சர்ச்சைக்கு உள்ளானது.
படத்தில் போலீஸ் கேரக்டரில் இருந்த ஒருவரின் வீட்டில் வன்னியர் குறியீடான அக்னி கலசம் பொருத்தப்பட் காலண்டர் மாட்டப்பட்டிருந்தது. மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெயர் குரு எனவும் அழைக்கப்பட்டது. உண்மைக்கதை என்று சொல்லப்பட்ட நிலையில் பல கருத்துக்களும், காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக வன்னியர்களை குறிவைத்து அதிகமான காட்சிகளும் இடம்பிடித்திருந்தது.
இது வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல இடங்களில் நடிகர் சூர்யாவின் புகைப்படங்களை எரித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 7 கேள்விகளுடன் அறிக்கை ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த நோட்டீசுக்கு மன்னிப்பு கேட்காமல் சூர்யா வேண்டும் என்றே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ஒரு பதில் அறிக்கையை அளித்திருந்தார். இது மேலும் வன்னியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் 'படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்' என்று மனுதாரர் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source: Pmk Advocate Notice
Image Courtesy: Daily Thanthi