நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் வன்னியர்கள் குறியீடான அக்னி சட்டியையும், காடுவெட்டி ஜெ.குருவை பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாமக மற்றும் ஒட்டுமொத்த வன்னியர் அமைப்புகளும் ஜெய்பீம் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-23 07:17 GMT

இந்த எதிர்ப்புக்கு பயந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் இதனை பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவெளியில் ஜெய்பீம் படக்குழு மற்றும் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்நிலையில், வன்னியர் சங்க தலைவர் புதா.அருள்மொழி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நீதிமன்றத்தில் ஜெம்பீம் படக்குழு மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் ஓடிடி நிறுவனம் உள்ளிட்டடோர்கள் இணைந்து ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து அவதூறாக காண்பித்துள்ளனர். இரண்டு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, அவதூறு பரப்பியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source: Vanniyar Sangam

Image Courtesy: BBC

Tags:    

Similar News