வாசன் ஐகேர் அருண் தற்கொலை? சிதம்பரத்தின் சொத்துக்களை பற்றி அறிந்தவர்.!
வாசன் ஐகேர் அருண் தற்கொலை? சிதம்பரத்தின் சொத்துக்களை பற்றி அறிந்தவர்.!
இந்தியா முழுவதும் சுமார் 170 கிளைகளுடன் இயங்கி வரும் வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் அருண் இன்று இறந்த சம்பவம் அவர் குடும்பத்தில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதில் வாசன் ஐ கேர் என்ற பெயரில் திருச்சியில் கண் மருத்துவமனையை தொடங்கிய அருண், அடுத்த 10 வருடங்களில் இந்தியா முழுவதும் தனது கிளைகளை படபடவென பரவச் செய்தார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வலதுகரமாக திகழ்ந்த அருணுக்கு கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக இருந்த முருகையா என்பவரின் மகன் தான் இந்த அருண். வாசன் குரூப் என்ற பெயரில் திருச்சியில் முருகையா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளது. திருச்சி கரூர் சாலையில் ஏபிசி ஹாஸ்பிடல் என்ற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவிய அருண், கண் மருத்துவத்திற்கென பிரத்யேகமாக வாசன் ஐ கேர் என்ற மருத்துவமனையை 2008-ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கினார்.
ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக திகழ்ந்த அருணின் வளர்ச்சி அடுத்த சில வருடங்களில் ஆலமரம் போன்று பெருகியது. ஒரு சமயத்தில் கண் மருத்துவமனையை திறந்து வைக்க அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை அழைத்து வரும் அளவுக்கு அருணின் செல்வாக்கு உயர்ந்திருந்தது என்றால் அனைவரையும் புருவம் உயரச்செய்துள்ளது என்று சொல்லலாம்.
இந்தியா முழுவதும் சுமார் 170 கிளைகளில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வரும் நிலையில் மாதம் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.