வேலூர் மாநகரில் 111 தெருக்கள் தகரத்தால் அடைப்பு.!
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தால் தெருவை உடனடியாக தகரத்தால் வைத்து அடைத்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தால் தெருவை உடனடியாக தகரத்தால் வைத்து அடைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதே போன்று வேலூரிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தகரத்தால் தெருக்களை அடைத்து வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது 111 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் கிருமிநாசினிகளை சுகாதாரத்துறையினர் தெளித்து வருகின்றனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் தகரம் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.